உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியைத் தயாரித்துள்ள சீனா

உலகின் மிகப்பெரிய  தொலைநோக்கியை, சீனா அதிகாரபூர்வமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

தொலைநோக்கியின் பரப்பளவு சுமார் 30 காற்பந்துத் திடல்களுக்குச் சமம். அது குய்ஸோவ் மாநிலத்தில் அமைந்துள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பூமியைப் போல் மற்ற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை பூமியிலிருந்து கண்டறிய அந்தத் தொலைநோக்கியைத் தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அது வானலைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், நிலையான, நம்பகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.

“Sky Eye” அதாவது “விண் கண்” என்ற பெயரில் சீனர்கள் அதை அழைக்கின்றனர்.

தொலைநோக்கி 2016ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டதாகவும், உத்தேசப் பிழைகளை அடையாளம் கண்டு அவற்றைச் சரி செய்ய சில ஆண்டுகள் ஆனதாகவும் Xinhua செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

புதிய தொலைநோக்கி சில குறிப்பிடத்தக்க அறிவியல் தகவல்களைச் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியைக் காட்டிலும் இது 2.5 மடங்கு மேம்பட்ட ஆற்றல் கொண்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் சீனா விண்வெளி ஆய்வுகளில் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் முந்திச்செல்ல விழைகிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ஓமன் சுல்தான் மறைவு

ஓமன் சுல்தான் மறைவுக்கு ஐநா பொதுச் செயலாளர் இரங்கல்

Next Article

அமைதிக்கான நொபெல் பரிசை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும்; குமுறும் டிரம்ப்

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
0
Share