ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளும், இயற்கை தீர்வுகளும்

ரத்த அழுத்தம் ஆரோக்கிய அளவைக் கடந்து அதிகரிக்கும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் போது சில நேரங்களில் அறிகுறிகள் தெரிந்தாலும் பல நேரங்களில் அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் ரத்த குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இருதய நோய்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. தலைவலி, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, நெஞ்சுவலி மற்றும் உயர் ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட உபாதைகளும் வரக்கூடும்.

உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும் உணவில் அதிக உப்பு எடுத்துக்கொள்வது, அதிகமாக மது அருந்துதல், மன உளைச்சல், மரபியல், தைராய்டு ஆகியவை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட காரணிகளாக அமையலாம்.

உயர் ரத்த அழுத்தத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ரத்த குழாய்கள் சேதமடையும் : ஆரோக்கியமான ரத்த குழாய்கள் நெளிந்து சுருங்கும் தன்மை கொண்டது. உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் ரத்த குழாயின் உட்புறத்தில் உள்ள உயிரணுக்கள் சேதமடையும்.

இருதய பாதிப்புகள்: உடல் முழுவதற்கும் ரத்தத்தை அனுப்பி வைப்பது இதயம். உயர் ரத்த அழுத்தத்தால் இதயத்தின் சுமை அதிகரிக்கிறது. இதனால் இருதய தசைகள் வலுவிழக்கின்றன.

மூளை பாதிப்புகள்: உயர் ரத்த அழுத்தத்தால் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ரத்தம் கட்டி அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுநீரக பாதிப்புகள்: உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு ரத்த குழாய்களில் அதிக ரத்தம் செல்வதால் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்கள் பாதிக்கப்படும்.

கண்களுக்கும் பாதிப்பு: கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த கசிவு ஏற்படலாம் அல்லது பார்வையிழக்கவும் நேரலாம்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்

கேரட்: கேரட்டுகளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A சத்து இருப்பதால் பச்சையாக கேரட் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

தக்காளி: வைட்டமின் E மற்றும் ஆண்டி-ஆக்சிடண்ட் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தக்காளி உதவும்.

டார்க் சாக்கலேட்: ஸ்ரோக் ஏற்படும் வாய்ப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்து கெட்டக் கொழுப்பை குறைக்கும் வல்லமை கொண்டது டார்க் சாக்கலேட்.

இளநீர்: மக்னீசியம் மற்றும் எலக்ட்ரோலைட் கொண்ட இளநீர், ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் இதய ஆரோக்கியத்திற்கு உற்ற துணை புரிகிறது.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதக் கூடாது. உணவு பழக்கங்களில் மாற்றங்கள் செய்யும் முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
முகத்தில் எண்ணெய் வடிகிறதா

முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமம் பளிச்சிட இதோ வழி

Next Article
புனித ஹஜ் பெருநாள்

ஓகஸ்ட் 01 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள்

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
2
Share