உமிழ்நீர்

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை அறிமுகம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 53.61 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக 1.69 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் நடக்கிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன.

இதனால் அவ்வப்போது, பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது கொரோனா பரிசோதனைகளை விரைவாக கண்டறிய எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறியும்‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கப்பட்டுள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் இந்த பரிசோதனை முறை முன்னெடுக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது.

‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.

இந்த சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என உணர்ந்ததாக விஞ்ஞானி அன்னே வில்லி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

முட்டைகளை உடைக்காமல் காரை ரிவர்ஸ் எடுத்த 4 வயது சிறுவன்..!

Next Article
Traffic

கொழும்பின் பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல்

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
Total
3
Share