Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

உங்கள் மூக்கின் வடிவத்தை வைத்தே குணத்தை சொல்லலாம்.. நீங்களே பாருங்கள்..!

மனிதனின் மனோபாவத்தை அவரது மூக்கை வைத்தே சொல்லிவிட முடியும். மூக்கின் தன்மையை ஒட்டியே நம் குணநலன்களைக் கணித்துவிடலாம் என இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூக்கு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதில் 8 வகையான மூக்கைப் பார்த்து குணாதிசயங்களை வரையறுத்துள்ளனர். இதில் உங்கள் மூக்கு என்ன ரகம் எனப் பாருங்கள்.

ரோமன் மூக்கு

இந்த ரக மூக்கு கொண்டவர்கள் இவர்கள் வலுவான உணர்ச்சியைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எப்போதும் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களுடன் பாசமாக இருப்பார்கள். இவர்கள் சில நேரங்களில் தன்னை தானே மறந்துவிடுவார்கள்.

 

 

 

நேரான மூக்கு

இவர்கள் ஆளுமைமிக்கவர்கள். இவர்கள் எந்த சூழலும் தன் மீதான நம்பிக்கையை கைவிடாதவர்கள். மற்றும் தங்கள் தனித்திறனில் அதீத நம்பிக்கையைக் கொண்டவர்கள். இவர்களை யாரும் எளிதில் வீழ்த்த முடியாது.

 

 

 

 

மேல்நோக்கிய மூக்கு

இவர்கள் மகிழ்ச்சியான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது குணம் மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும்வகையில் உள்ளது.

 

 

 

 

 

கழுகு வடிவிலான மூக்கு

இவர்கள் எதையும் சிறப்பாக செய்வார்கள். இவர்கள் எப்போதும் தொழிலில் வெற்றியாளராக இருப்பார்கள். தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் அதீத புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

 

 

 

கொக்கி வடிவில் மூக்கு

இவர்கள் லட்சியவாதிகள். இவர்கள் வலுவான நம்பிக்கையும், கொள்கையும் கொண்டிருப்பார்கள்.

 

 

 

 

கிரேக்க மூக்கு

இவர்கள் யாருடனும் எளிதில் பழகமாட்டார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் அதிகம். இவர்கள் உணர்ச்சிகளை வெளியில் காட்டமாட்டார்கள். மிகவும் விஸ்வாசமானவர்களாக இருக்கும் இவர்களை எந்த சூழலிலும் நம்பலாம்

 

 

 

நுபியன் மூக்கு

இவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருப்பார்கள். எப்போதும் சமூக அக்கறை கொண்டிருப்பார்கள். இவர்களை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x