Tue, Mar9, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இளம்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த போதை காவல்துறை உத்தியோகத்தர்

கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் காற்று வாங்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் மெரினாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.பொதுமக்களும் முதல் நாளே மெரினா கடற்கரைக்கு சென்று உல்லாசமாக பொழுதை போக்கினார்கள்.

முதல் நாளே மெரினாவை பரபரப்புக்குள்ளாக்கிய சம்பவம் நிகழ்ந்து விட்டது.

சென்னை ஆயுதப்படை காவல்துறை உத்தியோகத்தர் பாபு (வயது 32) என்பவரும் மெரினாவுக்கு காற்று வாங்க சென்றார்.அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது.

விவேகானந்தர் இல்லம் அருகே இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவரது தந்தை அருகே சென்றிருந்தார்.

போதை காவல்துறை உத்தியோகத்தர் தனியாக நின்றிருந்த இளம்பெண்ணிடம், தகாத வார்த்தைகள் பேசி தவறான உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது.

இளம்பெண் பதில் ஏதும் சொல்லாமல் நின்றிருந்தார்.அருகில் சென்றிருந்த தந்தை திரும்பி வந்துள்ளார்.அவர் போதை காவல்துறை உத்தியோகத்தர் பாபுவை கண்டித்துள்ளார்.

உடனே பாபு அவரிடம் சண்டை போட்டுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் பாபுவை அடித்து, உதைத்து மெரினா காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மெரினா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாபு மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x