Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இலங்கையில் தேடப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் இந்தியாவில் கைது

இலங்கையில் பாதாள உலகக் குழு உறுப்பினரான சுனில் பொன்சேகா என்பனவர், பெங்களுரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக க்யூ பிரிவு பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரால் தேடப்பட்டு வந்த சுனில் பொன்சேகா, கடந்த 2003 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், தமிழக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த அவர், தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி, இந்திய குடிமகனுக்கான ஆவணங்களையும், போலி கடவுச்சீட்டையும் பெற்றுள்ளார்.

அவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சென்னையில் கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அவர் தங்கியிருந்துள்ளார்.

இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பொன்சேகா, பின்னர் பெங்களுருவில் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து, சுனில் பொன்சேகாவை பெங்களூருவில் வைத்து தமிழக க்யூ பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்