Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் (02) இருவரின் மரணம் இடம்பெற்றிருப்பது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலகஹா பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் 2020.11.27 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாமையினால் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண், 2020.11.28 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமையினால் உயர் இரத்த அதிகரிப்பு நீரிழிவு மற்றும் அதிகரித்த இரத்தக் கொழுப்பு (கொலசுட்ரால்) நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news