இலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்

உலகம் புதிய இயல்பினை தனது சூழல் அமைப்புக்குள் உள்வாங்கியுள்ள நிலையில், இலங்கையில் டிஜிட்டல் கட்டமைப்பானது புதிய சக்தியுடன் முன்னேறி வருவதுடன், மிகவும் துணிச்சலான திட்டங்களை எதிர்காலத்துக்கென கொண்டுள்ளது.

‘புதிய இயல்பானது’ இலங்கை நுகர்வோரிடையே பல ‘நடத்தைக்கோல மாற்றங்களுக்கு’ வழிவகுத்துள்ளதுடன், டிஜிட்டல் முறையில் இணைந்திருக்க வேண்டியது இவற்றில் ஒன்றாகும். நாம் ‘உடல் ரீதியான கட்டுப்பாடுகளை’ கடைபிடிக்கும் காலப்பகுதியில் இருக்கும் நிலையில், ​​மெய்நிகர் தளங்கள் இணைப்பு மற்றும் தொடர்பாடல் தேவைக்கு போதுமானதாக உள்ளன. மேலும் இந் நாட்டின் இணைய நுகர்வானது தொடர்ந்து முக்கியத்துவம் பெறும்.

‘புதிய இயல்பு’ சகாப்தமானது ‘டிஜிட்டல் இணைப்பு மற்றும் உள்வாங்கல்’ எவ்வாறு எங்கும் நிறைந்திருக்க வேண்டும் என்பதையும், டிஜிட்டல் சூழல் அமைப்புகள் ஏன் அவசியமானவை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்ட இக் காலப்பகுதியில், ஸ்மார்ட்போன்கள் டிஜிட்டல் இணைச்சார்பினை மேலும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இலங்கை பிரஜைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சமுதாயத்திற்கான துரிதமான தேவையை உணர்ந்துள்ளனர். மேலும் ஸ்மார்ட்போன்கள் மக்களுக்கு இயல்புநிலையை ஏற்படுத்துவதில் தீர்க்கமான பங்கை வகித்துள்ளன.

ஸ்மார்ட்போன்கள் இணையத்தின் சக்தியைப் பயன்படுத்த மக்களுக்கு உதவியுள்ளன. மேலும் பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு வலயங்கள் மற்றும் தகவல் மையங்களுக்கும் போதுமானதாக உள்ளன. ஸ்மார்ட்போன்கள் டிஜிட்டல் இணைப்பை அடைவதற்கும், பொருளாதாரம் மற்றும் பணிப்பாய்வு தொடர உதவுவதற்கும் மக்களுக்கு உதவியுள்ளன.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் எழுச்சியானது இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தினை தூண்டியுள்ளதுடன், ஸ்மார்ட்போன்கள் நெட்டிசன்களுக்கு ஒன்லைன் உலகின் எல்லையற்ற சாத்தியங்களை கண்டறிய உதவுகின்றன.

கூடையின் பெறுமதி 11$ இலிருந்து 38$ ஆக அதிகரித்தமையானது நாட்டின் இலத்திரனியல் வர்த்தகமானது 245% அதிகரிப்பைக் காண வழி செய்தது. இதற்கான பிரதான காரணங்கள் இலத்திரனியல் கொடுப்பனவு, இலத்திரனியல் வணிகள், ஒன்லைன் மருத்துவ ஆலோசனை மற்றும் இலத்திரனியல் தளங்களின் அண்மைய பிரிவான இலத்திரனியல் விளையாட்டு  ஆகியனவையாகும்.

ஸ்மார்ட்போன்கள் ஒன்லைன் வகுப்புகள், ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் இலத்திரனியல் கொடுப்பனவுகள் போன்ற அன்றாட நடவடிக்கைகளை பலப்படுத்துவதுடன்,  43% பேர் ஒன்லைனில் புதிய விஷயங்களை முயற்சித்திருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் மந்தநிலை முடிவடைந்து விட்டது என்பதும், அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர் டிஜிட்டல் பொறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முனைகிறார்கள் என்பதும் உறுதியாகின்றது.

இதில் ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், பேஸ்புக் 200%, யூடியூப் 50% பாவனையாளர் வளர்ச்சியையும் கண்டுள்ளமையாகும். இதனால், நாட்டின் டிஜிட்டல் துறையானது மலர்ச்சியுறும் விளிம்பில் உள்ளதுடன் ஸ்மார்ட்போன்கள் அதன் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஸ்மார்ட்போன் துறையானது ஒரு நம்பிக்கைக்குரிய வழியை நோக்கியுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, இப்போது மொபைல் போன்களின் பாவனையானது இலங்கை மக்கள் மத்தியில் ஒரு பொதுவான அம்சமாக மாறியுள்ளது.

ஏறக்குறைய மூன்று தசாப்த கால யுத்தத்தின் நிறைவானது முழு நாட்டையும் அவர்களின் தொடர்பு நோக்கங்களுக்காக மொபைல் போன்களைப் பயன்படுத்த தூண்டியதுடன், இந்த வளர்ச்சி இலங்கையில் மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சாதகமாக பங்களிப்பு செய்தது.

தற்போது, ​​10.10 மில்லியனுக்கும் அதிகமான இணைய பாவனையாளர்கள் மற்றும் 47% க்கும் மேற்பட்ட இணைய ஊடுருவலுடன், இலங்கை ஸ்மார்ட்போன் சந்தை 11% வருடா வருட வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான  தேவை தொடர்பான இந்த வாய்ப்பை ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் கவனித்து வருகின்றனர்.

சந்தை பற்றிய ஆழமான நுண்ணறிவானது 48% மக்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க ஆர்வமாக இருப்பதாக வெளிப்படுத்துகிறது.  இந்த வகையில், ‘மேக் இன் இலங்கை’ மற்றும் ‘டிஜிட்டல் இலங்கை’ ஆகிய தொலைநோக்கு பார்வையானது எதிர்வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் துறையை சீர்திருத்துவதில் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்க முடியும்.

தொழில்நுட்பத்திற்கான ஆர்வமானது பாவனையாளர்களுக்கு தனிப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் புரட்சிகர அனுபவத்தை வழங்கும் சாதனங்களை  அறிமுகப்படுத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில், ஸ்மார்ட்போன் துறையானது ‘வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கங்களை நோக்கி முன்னேறும்.

ஸ்மார்ட்போன்கள் இப்போது ஒரு அத்தியாவசியப் பொருளாகக் கருதப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அம்சங்கள் துறையில் ஆதிக்கம் செலுத்தும். அம்சங்களால் நிறைந்த ஸ்மார்ட்போன்களுக்கான தேவை எப்போதும் அதிகரிக்குமென்பதுடன், ‘எல்லாவற்றிலும் சிறந்த’ ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெறும்.

ஸ்மார்ட்போன்கள் தற்போது பல்வேறு பணிகளுக்கான சாதனங்களாக மாறி வருவதுடன், மேலும் அவை நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் செல்வாக்கு செலுத்துகின்றன. அவை தற்போது நமக்கான அனைத்துமாக மாறிவிட்டன.

அந்த வகையில், பொழுதுபோக்குக்கென High definition திரை, பணிகளுக்கான நீடித்துழைக்கும் battery , மற்றும் கேம்கள், சீரான செயற்பாடுகளுக்கான உறுதியான processor என நுகர்வோரின் தேவைகளும் மாறி வருகின்றன. ஸ்மார்ட்போன் துறையில் போக்கினை மாற்றுபவையாக தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்கள் வெளிப்படுவது உறுதி.

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புத்தாக்க உணர்வைக் கொண்டு இயங்கி வருகின்றது. அதன் முக்கிய வேறுபாடு என்னவெனில் ஆற்றல்மிக்க இளைஞர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீனமான, புதுமையான தயாரிப்புகளாகும்.

தனது வாடிக்கையாளரின் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு AI-powered Quad cameras, In-Screen Fingerprint Scanners, Superb HD Displays, Pop-Up camera, Special gaming மற்றும் turbo modes, Flash charging போன்ற பல அம்சங்களை இத் துறையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தகநாமமாக, vivo இந்த டிஜிட்டல் உருமாற்றத்தைத் இலக்கு வைத்துள்ளதுடன், பாவனையாளர்களின் அனைத்து டிஜிட்டல் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்கிறது.

மேலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள 5G தொடர்பான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகின்றது டிஜிட்டல் புரட்சியை சாதகமாக மாற்ற நாட்டுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ள ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்.

vivo அதன் புதுமையான ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் டிஜிட்டல் துறையை வளர்ப்பதற்கு உதவுவதோடு, நாட்டை ‘புதிய இயல்பு’ நிலையிலிருந்து ‘புதிய இயல்புக்கு அப்பால்’ கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ஹட்டனில் தூக்கில் தொங்கிய யாழ்ப்பாண , சிறுமியின் சடலம்

கிளிநொச்சியில் காணாமல்போன காதலர்கள் சடலமாக மீட்பு

Next Article
கொரோனா பிளஸ்மா சிகிச்சை

இலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Related Posts
Pelwatte redefining health and safety measures
Read More

கொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புகழ்பெற்ற உள்ளூர் பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy, தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுநோய் காலப்பகுதியில் அதன் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பினை…
Read More

Singer இன் நேர்த்தியான சமையலறை built-in உபகரணங்கள்

ஆடம்பர மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதை நாம் தொடர்ந்து அவதானித்து வரும் நிலையில்,  நவீன வாழ்க்கை முறையானது எமது வேகமான வாழ்வில்…
Read More

Pelwatte Dairyயின் மற்றொரு நிலைபேறான திட்டம்

உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries  ,  தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும்…
Read More

சீனி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையை குறிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய பொதிசெய்யப்பட்ட வெள்ளை சீனி ஒரு கிலோகிராம்…
Total
0
Share