Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இறுதியாக பதிவான தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் 559 பேருக்கு கொவிட்19 தொற்று நேற்று (26) உறுதியானது. பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 பேர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 06 பேருக்கு தொற்று உறுதியானது.

அவர்களில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும், துருக்கி, மாலைத்தீவு, ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் மற்றும் கடலோடி ஒருவருக்கும் நேற்று கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 28 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 491 ஆக உயர்வடைந்துள்ளது

இதேவேளை நேற்றைய தினம் 369 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 6 ஆயிரத்து 113 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்