Thu, Jan21, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இறுதியாக உயிரிழந்த தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 4 மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (22) தெரிவித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் 2020 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண், வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமை ஆகும்.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண், கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2020 நவம்பர் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா நிலை அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்