Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இரவோடு இரவாக இராணுவ அணிவகுப்பு நடத்திய வடகொரியா

வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் வகையில் சனிக்கிழமையன்று அந்நாடு இராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அரிதிலும் அரிதாக இந்த அணிவகுப்பு பகல் நேரத்தில் நடத்தப்படவில்லை.

வழக்கமாக தனது ஆயுத பலம் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை வெளிக்காட்டும் வகையிலேயே இத்தகைய ராணுவ அணிவகுப்புகளை வடகொரியா நடத்தும்.

சனிக்கிழமை அதிகாலை நடந்த இந்த நிகழ்வில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் இடையே நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தனது ராணுவ அணிவகுப்பு பயன்படுத்தவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவால் நடத்தப்படும் இந்த ராணுவ அணிவகுப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் நிகழ்ந்துள்ளது.

தென்கொரிய ராணுவத்தின் தகவலின்படி இந்த அணிவகுப்பு சனிக்கிழமை அன்று விடியலுக்கு சற்று முன்பு நடந்துள்ளது. அதிகாலை நேரம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் எதுவும் தெரியவில்லை.

வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகத்தினர் இந்த ராணுவ அணிவகுப்பை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த ராணுவ அணிவகுப்பின் முடிவில் உரையாற்றிய கிம் வட கொரியாவில் யாருக்கும் வைரஸ் தொற்று உண்டாகாமல் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவவில்லை என்று கிம் தொடர்ந்து கூறி வந்தாலும் உயர்மட்ட அலுவலர்களுடனான சந்திப்பை அடிக்கடி நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக அமலில் உள்ளன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்