சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும்

இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும்?

சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என கூறி இரண்டு, மூன்று நாள்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள்.

உண்மையில் இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும்.

இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை. இந்தநிலைக்கு ‘கெடோசிஸ்’ (ketosis) என்று பெயர்.

உடல் இந்த நிலையை எட்டிவிட்டால், மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும் சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும்.

இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.

ஓய்வுக்கு பின்னர் தோனி என்ன செய்யபோகிறார் தெரியுமா ?

72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால் உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான்.

முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும்.

இது பொதுவான கருத்து, ஆனால், உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

எனவே உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின் உடல்நலம், உயரம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும் தான் தீர்மானிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா

முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா?

Next Article
ஆமணக்கு காய்

ஆமணக்கு காய் சாப்பிட்ட 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
3
Share