இரண்டரையை மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டரையை மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தை திருத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோரிக்கையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் யோசனையை இரண்டரை வருடங்களில் இருந்து நான்கரை வருடங்களாக மாற்றுமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.