Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா. இதையடுத்து அவர் பெயருடன் ‘சிறுத்தை’ சேர்ந்துகொண்டது.

இந்தப் படத்துக்கு முன், தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

2014-ம் ஆண்டு வீரம் படத்தின் மூலம் அஜித்துடன் சிவா இணைந்தார். இந்த படம் ஹிட்டானது. அடுத்தடுத்து விஸ்வாசம் வரை 4 படங்களில் அஜித்துடன் பணியாற்றினார்.

விஸ்வாசம் வெற்றியை அடுத்து தற்போது ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் தந்தை ஜெயக்குமார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தையின் திடீர் மரணத்தால் சிவாவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரைத்துறையினரும், உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

மறைந்த ஜெயக்குமார், டாக்குமென்டரி புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது தந்தை ஏ.கே.வேலன், திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து மறைந்தவர்.

அருணாச்சலம் ஸ்டூடியோவின் உரிமையாளர். தந்தை ஜெயக்குமாரின் மரண செய்தி கேட்டு இயக்குநர் சிவாவின் தம்பி, நடிகர் சிவா கேரளாவில் இருந்து சென்னைத் திரும்பியுள்ளார்.

இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது. அவர் மறைவை அடுத்து திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news