இன்றைய ராசி பலன் (21.09.2022) | Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil

Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil | இன்றைய ராசி பலன்கள் 2022

இன்றைய ராசி பலன் (21.09.2022) | Indraya Rasi Palan 2022  | Today Rasi Palan 2022 in Tamil

Indraya Rasi Palan 2022 | Today Rasi Palan 2022 in Tamil | இன்றைய ராசி பலன்கள் 2022 

Indraya Rasipalan:- இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்ற பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! Indraya Naal Eppadi in Tamil

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள்.விருந்தினரின் வருகையால் வீடு,களை கட்டும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

துலாம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயம் அடையும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது  பொருள் வந்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தால் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.

மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW