மேஷம்- இன்று கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
ரிஷபம்- இன்று பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
மிதுனம்- இன்று புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம். உத்தியோகஸ்தர்கள் உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
கடகம்-இன்று சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
சிம்மம்- இன்று எதிர்பார்த்த சலுகைகள் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
கன்னி-இன்று மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
ராசி பலன்கள்
துலாம்-இன்று எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
விருச்சிகம்-இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
ராசி பலன்கள்
தனுசு- இன்று வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதலும் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
மகரம்-இன்று எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3
கும்பம்-இன்று சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6
மீனம்-இன்று வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். பிள்ளைகள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News atColombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.