Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் 26.09.2020 – வெற்றி பெறும் நாள்!

இன்றைய ராசிபலன் 26.09.2020

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கைகொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்: பிள்ளைகள் உங்கள்அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பார்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதுசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நல்லன நடக்கும் நாள்.

துலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். புது வேலை முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

இன்றைய ராசிபலன் 26.09.2020

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் . உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித்தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படிஇருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்றுஅறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.முயற்சியால் முன்னேறும் நாள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்