Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

இன்றைய ராசிபலன் 22.10.2020 – நன்மை கிட்டும் நாள்!

இன்றைய ராசிபலன் 22.10.2020

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகளை நினைத்து பார்த்து கோபப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில்சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும்.உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி: பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்ற பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை வீற்பீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

இன்றைய ராசிபலன் 22.10.2020

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றி கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயன் அடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

மீனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x