Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் 12.10.2020 | கனவு நனவாகும் நாள்.!

இன்றைய ராசிபலன் 12.10.2020

மேஷம் : திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாள்.

ரிஷபம் : குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களைமாற்றி கொள்வீர்கள். சொத்துவாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். முயற்சியால் வெல்லும் நாள்.

மிதுனம் : குடும்பத்தில் சந்தோஷம்இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதி காரிஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கடகம் : ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்க பாருங்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறு வார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

சிம்மம் : கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.

துலாம் : சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம் : கணவன்- மனை விக்குள் அன்னியோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். பிள் ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டிஇருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும் நாள்.

இன்றைய ராசிபலன் 12.10.2020

மகரம் : பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.நன்மை கிட்டும் நாள்.

கும்பம் : சமயோசிதமாக, சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுங்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

மீனம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்து ஆகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நினைவாகும் நாள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்