Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் 11.10.2020 – கனவு நனவாகும் நாள்!

இன்றைய ராசிபலன் 11.10.2020

மேஷம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும் . வெளியில் இருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்: உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். தைரியமுடன்செயல்பட வேண்டியநாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாககணவன்-மனைவிக்குள் இருந்தமனக்கசப்பு நீங்கி அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

கடகம்: சந்திரன் இருப்பதால் சில காரியங்களை முடிக்கப் போராடவேண்டியிருக்கும். குடும்பத்தில்சலசலப்புகளும், பிரச்சினைகளும் உருவாகும். வியாபாரத்தில்அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விசேஷங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும் நாள்.

சிம்மம்: விவாதங்களை தவிர்ப்பதுநல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். அலைச்சலுடன்ஆதாயம் தரும்நாள்.

கன்னி: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சிலபுதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.

துலாம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களைமதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். நேர்மறை சிந்தனை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்

இன்றைய ராசிபலன் 11.10.2020

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்ல போய் உங்களுக்கே தொந்தரவாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும்தன்னைப் புரிந்து கொள்ளவில்லைஎன ஆதங்கப்படுவீர்கள். வக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மகரம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். நன்மை நடக்கும் நாள்.

கும்பம்: வழக்கு சாதகமாக முடியும். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.தொட்டது தொடங்கும் நாள்.

மீனம்: பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ஆடம்பரசெலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். கனவு நனவாகும் நாள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்