DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 04.08.2020 – முயற்சிகள் பலிதமாகும் நாள்!

இன்றைய ராசிபலன் 04.08.2020

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சங்களை கற்றுக் கொள்வீர்கள். நிதானமுடன் செயல்படவேண்டிய நாள்.

கடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். அரசால்அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கனவு நனவாகும் நாள்.

துலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை முயற்சி பலிதமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

இன்றைய ராசிபலன் 04.08.2020

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் தடைகள் அதிகமாகும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
மினிஷா லம்பா

திருமண வாழ்க்கை கசந்தது.. காதல் கணவரைப் பிரிந்தார் பிரபல நடிகை

Next Article
தடயவியல் கணக்காய்வு அறிக்கை

புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20இல் கூடும்

Related Posts
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்!

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா? அதற்கு உதவுவது தான்…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடுமாம்…

இன்று உங்களது ராசிக்கான பலன்களை குறித்து இப்போது தெரிந்து கொள்வோம். இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும், யாருக்கு சிரமங்கள் அதிகரிக்கும் என்பதை அறிய…
இன்றைய ராசி பலன்கள்
Read More

இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்!

நாள்தோறும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. மேஷம் – இன்றைய…
DAILY HOROSCOPE 18th november, இன்றைய ராசிபலன் 2019 ஒக்டோபர் 15, Today Rasi Palan
Read More

இன்றைய ராசிபலன் 27.11.2020

இன்றைய ராசிபலன் 27.11.2020 மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சில…
Total
2
Share