Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இன்று முதல் தமிழகத்தில் தொடங்குகிறது தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்த மத்திய அரசு தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது.

அதன்படி தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. தினசரி தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆயிரத்து 900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 5000 க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள கட்டமைப்பு படி, இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்வதால், தடுப்பூசித் திருவிழாவுக்கு என தனியாக மையங்கள் திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால், அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x