இலங்கைதொழில்நுட்பம்விசேட செய்திகள்

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று

வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம், ஜூன் 5ஆம் திகதியான இன்று மற்றும் ஜூன் 6ஆம் திகதியான நாளை ஆகிய நாள்களுக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.

இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.

இந்த கிரகணத்தை ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்ரிக்கா ஆகிய கண்டங்களில் பார்க்க முடியும்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். நிகழப்போகும் கிரகணம், முழுமையான கிரகணம் அல்ல.

சந்திர கிரகணத்தின்போது, நடுவில் இருக்கும் ‘அம்ரா’ எனப்படும் பூமியின் நிலவின் உட்பகுதி நிலவின் மேற்பகுதி மீது விழும்.

அவ்வாறு விழும் நிழல், நிலவை முழுமையாக மறைப்பதால், நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். அதுவே ‘பிளட் மூன்’ (குருதி நிலவு) என்று அழைக்கப்படுகிறது.

நிகழப்போகும் சந்திர கிரகணம், பெனம்ரா சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.

கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்.

இதே போன்ற சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதியும் நிகழ்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close