Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக 2019-ல் போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். அவர் பிரதமரான பின்னர் முதல் முக்கிய பயணமாக இந்தியாவுக்கு, குடியரசு தினத்தன்று வருகை தர இருந்தார்.

அச்சமயத்தில் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் துவங்கியதால் கடைசி நேரத்தில் அப்பயணத்தை ரத்து செய்தார்.
அப்பயணம் இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏப்., 26 முதல் நான்கு நாட்கள் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம் வகுக்கப்பட்டது.

இந்தியாவில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவுவதால் ஏப்., 26 அன்று ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகள், கூட்டங்களை வைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி., ஸ்டீவ் ரீட் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை ரத்து செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சினின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x