இந்தியன் 2

இந்தியன் 2 வதந்திக்கு விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி

ஷங்கர்-கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. சேனாதிபதியாக வயதான தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் ஊழல்வாதிகளை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கமல்ஹாசன் காலில் பொருத்திய கம்பியை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் ஓய்வெடுத்து வருகிறார்.

விரைவில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் சித்தார்த், பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அண்மையில் சென்னையில் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசும்போது, “ஏற்கெனவே கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வந்த நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார்.

இந்தியன் 2-வில் நான் நடிக்க உள்ளதாக பரவும் செய்தியில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என கூறியுள்ளார்.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
பேட்மிண்டன்

பேட்மிண்டன் லீக் போட்டியில் இருந்து ஸ்ரீகாந்த் விலகினார்

Next Article
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Related Posts
Read More

தொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்

விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…
ரஜினிகாந்த்
Read More

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!! நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30)…
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Total
2
Share