Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

இடைநிறுத்தப்படவிருந்த யாழ்ப்பாணம், கண்டி, பதுளைக்கான சில ரயில் சேவைகள் மீள முன்னெடுப்பு

நாளை முதல் பல ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, சில ரயில் சேவைகளை மீள முன்னெடுப்பதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலன்னறுவை முதலான இடங்களுக்கான 16 ரயில் சேவைகள், நாளை முதல், மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

கொவிட்-19 பரவல் காரணமாக, ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் கண்டி முதலான இடங்களுக்கான சில ரயில் சேவைகளை மீள முன்னெடுப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கோட்டை முதல் காங்கேசன்துறைக்கான, இரண்டு நாளாந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கொழும்பு கோட்டை முதல் பதுளைக்கான நாளாந்த ரயில் சேவை ஒன்றும், கோட்டை முதல் கண்டிக்கான வாரஇறுதி ரயில் சேவை ஒன்றையும் முன்னெக்க உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x