Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

ஆளுநர் மாளிகையில் முதல்வர் முற்றுகை போராட்டம்

ராஜஸ்தான் சட்டமன்றத்தை விரைவில் கூட்டுமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களோடு ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நேற்று (24) நடத்தினார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசை கவிழ்க்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி துணை முதல்வரான சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் இது தொடர்பான வழக்கில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று நேற்று மூன்றாவது முறையாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மத்திய அரசை மூன்றாவது நபராக இருந்து மத்தியஸ்தம் செய்யவும் அனுமதித்தது.

இந்தநிலையில் ராஜஸ்தான் சட்டமன்றத்தைக் கூட்டி தன் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தடையாக இருப்பதாகக் கூறி முதல்வர் கெலாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டார்.

முதல்வர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை நான்கு பேருந்துகளில் ராஜ் பவனுக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் புல்வெளிகளில் போராட்டத்தில் அமர்ந்தனர். சுமார் ஐந்து மணி நேரம் இந்த முற்றுகை நடந்தது.

மாநில அமைச்சரவையில் இருந்து சில விஷயங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்ட பின்னர் சட்டமன்றக் கூட்டத்தொடரை அழைப்பதாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உறுதியளித்ததை அடுத்து காங்கிரஸின் போராட்டம் நிறுத்தப்பட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x