ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட உயிர் தோழிகள்…

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமிர்தா மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய கல்லூரி தோழிகள். 21 வயதாகும் இவர்கள் இருவரும், கொல்லத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்.

கல்லூரியில இணைபிரியாமல் நட்புடன் பழகி வந்த இருவரும் விடுமுறை நாட்களிலும் கூட அடிக்கடி அலைபேசியில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது அமிர்தா இறுதி ஆண்டு படித்து வருவதால், படிப்பு முடிந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க அமிர்தாவின் பெற்றோர் முடிவு செய்தனர்.

எனவே பல இடங்களில் அமிர்தாவிற்கு வரன் தேடி வந்ததாகவும் தெரிகிறது. இது அமிர்தாவிற்கு பிடிக்காததால், இது குறித்து தனது தோழி ஆர்யாவிடம், தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும் என்றும், எனவே நான் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

தோழி ஆர்யாவிற்கும், அமிர்தா திருமணம் செய்துக் கொள்வதில் உடன்பாடில்லை என்பதால், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் மூவாற்றுப்புழா ஆற்றுக்குச் சென்ற இருவரும், கைகளை கோர்த்தவாறு ஆற்றிற்குள் குதித்துள்ளனர். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், மாணவிகள் 2 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் மறுநாள் இருவரின் உடலும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
4
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பந்தய புறா... அப்படி என்ன விசேஷம்?

Next Article

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' 2022ல் வெளியீடு

Related Posts
நிவர் புயல்
Read More

“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய…
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
நிவர் புயல்
Read More

நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தயார்

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி…
Total
4
Share