Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா?

ஆங்கிலத்தில் An Apple a Day Keeps the Doctor Away அதாவது தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய சூழலே வராது என்று சொல்வார்கள்.

இது உண்மையா… எந்த அளவுக்கு ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதைப் பற்றி காண்போம்.

ஒரு ஆப்பிளில் 95 கலோரி, 25 கிராம் கார்போஹைட்ரேட், 4.5 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி-யில் 9 சதவிகிதம், தாமிரத்தில் 5 சதவிகிதம், பொட்டாஷியத்தில் 4 சதவிகிதம், வைட்டமின் கே – யில் 3 சதவிகிதம் உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கின்றனர்.

இது தவிர quercetin, caffeic acid, மற்றும் epicatechin என்ற ஆன்டிஆக்ஸிடண்டும் அதிக அளவில் ஆப்பிளில் உள்ளது.

தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவதாக மருத்துவ ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. இது தொடர்பாக 20 ஆயிரம் நபர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

ஆப்பிள் உள்ளிட்ட பச்சைக் காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வைத்து ஆய்வு நடத்தப்பட்டதில் இவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய் பாதிப்பு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிளில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்பு அளவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இவை மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை மிகப்பெரிய அளவில் குறைக்கின்றன.

ஆப்பிளில் புற்றுநோய் செல்களை அழிக்கும், தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஃபிளவனாய்டு உள்ளதாக 40க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவில் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறதாம்.

ஆப்பிள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது. மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது, ஆஸ்துமா பாதிப்பு வராமல் தடுக்கிறது, டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது மேற்கூறிய கூற்று உண்மைதான் என்பது உறுதியாகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x