ஆப்பிளின் தோல் உண்மையிலேயே விஷத்தன்மை கொண்டதா..?

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன.

ஆனால், ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது?

ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது.

அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும். ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம்.

ஆப்பிளை கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர்.

அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு. அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு மட்டும் தனியே வரும்.

இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும். அதன்பின் தோலோடு சாப்பிடலாம்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை

Next Article
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில்

Related Posts
Read More

இந்த நேரத்தில் தினமும் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா… உங்க எடையும் குறையுமாம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் அன்றாட பழக்கமாக இருக்க வேண்டும். ஒருவர் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தண்ணீரைக் குடிக்கவும்,…
Read More

முள்ளங்கியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முள்ளங்கியில் இருக்கும் அதிகளவு நோயெதிர்ப்பு சக்தியானது, உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கிறது. வெள்ளை நிறத்தில் உள்ள முள்ளங்கி மருத்துவ…
Read More

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஒரு ஆபத்தான காதலில் சிக்கியிருக்கீங்கனு அர்த்தமாம்…!

காதல் ஒரு அழகான, விவரிக்க முடியாத உணர்வு. உங்களுக்கு பிடித்த ஒருவரைபார்க்கும்போது, மெதுவாக காதலிக்கத் தொடங்குங்கள், அது மிகவும் ஆரோக்கியமானதாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஒருவரின்…
Total
3
Share