Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

ஆன்லைனில் இளம் பெண் தூண்டில்! சிக்கிய இளைஞர்!

அழகிய பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு, ஆன்லைனில் இளைஞர் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இன்றைய நவநாகரீக உலகில் தங்களுக்கு பிடித்த வகையிலான பெண்களை, இளைஞர்கள் இணையதளங்களிலேயே அதிகளவில் தேடுகின்றனர்.

இதனாலேயே பெண்கள் பெயரில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் ஃபேக் ஐ.டி.களின் எண்ணிக்கை பெருமளவு பெருகிவிட்டது.

அண்மையில், ஆன்லைன் டேட்டிங் வெப்சைடில் தொடர்பு கொண்ட பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்பிய ஒரு வங்கி அதிகாரி பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்தது தெரியவந்தது. அதுபோல், நாக்பூரைச் சேர்ந்த 65 வயது நபரும் ரூ.8 லட்சத்துக்கு மேல் பணத்தை பறிகொடுத்தார்.

இதுபோன்று பலர் ஆன்லைன் டேட்டிங்கில் பணத்தை ஏமாந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த ராகுல் மேத்தா என்ற இளைஞரும் பணத்தை இழந்துள்ளார். சாஃப்ட்வேர் இன்ஜினியரான இவர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் உலாவுவதை வழக்கமாக கொண்டவர்.

ஒருநாள் ஆன்லைன் டேட்டிங் இணையதளத்தில் தனக்கான பெண்ணை தேடிய அவருக்கு அரீஜ் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். நல்ல அழகு, விரும்பிய நிறம், பிரகாசமான கண்கள் உடைய பெண்ணின் வலையில் விழுந்த இளைஞர் ராகுல், அவருடன் ஆன்லைனிலேயே சாட்டிங் செய்துள்ளார்.

ஓரிரு நாட்களில் இருவரும் வாட்ஸ்ஆப் எண்களை பகிர்ந்து கொண்டு, வீடியோ காலிங்கிலும் பேசியுள்ளனர். நட்பு முறையில் தொடங்கிய அவர்களது பேச்சு, இரவு நேரங்களில் எல்லைமீறிய ஆபாச பேச்சாக தொடர்ந்துள்ளது.

பெண்ணின் மயக்கும் பேச்சில் வீழ்ந்த ராகுல், அந்த பெண் சொன்னதையெல்லாம் செய்துள்ளார். ஒருநாள் இருவரும் ஆன்லைனில் வீடியோ சாட்டிங் செய்தபோது, தனக்கு முன்பு சுய இன்பம் செய்யுமாறு அந்த பெண், ராகுலிடம் கூறியுள்ளார்.

ராகுலும் பெண் கூறியவாறு செய்து முடித்த சிறிதுநேரத்தில், அவருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், ஏய் முட்டாள்! நான் பெண் இல்லை… நான் ஒரு ஆண். நீ இப்போது செய்த எல்லாவற்றையும் வீடியோ செய்து வைத்துள்ளேன். எனக்கு 2000 டாலர் பணத்தை உடனடியாக வழங்காவிட்டால், இந்த வீடியோவை உனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அனுப்பிவிடுவேன் என்று கூறியதுடன், அந்த வீடியோ லிங்கையும் அனுப்பியுள்ளான்.

பெண் ஒருவரை வைத்து, ஆண் ஒருவன் மோசடி செய்துள்ளதை அறிந்து அதிர்ந்து போன ராகுல், தம்மிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கெஞ்சினார். அவரது தொடர் கெஞ்சலுக்கு செவிசாய்த்த மிரட்டல் நபர், குறைந்தபட்சம் 20 டாலராவது தந்தால்தான், வீடியோவை வெளியிட மாட்டேன் என்று கூறியுள்ளான்.

இதையடுத்து, 20 டாலரை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பிய ராகுல், அதன்பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்றும் நினைத்தார். ஆனாலும் ஓரிரண்டு நாட்களில் மீண்டும் மெசெஜ் அனுப்பிய மர்ம நபர், இந்த முறை 100 டாலர் பணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளான்.

இனியும் தாமதிப்பதில் பலனில்லை என்று நினைத்த ராகுல், வெட்கத்தைவிட்டு, காவல்துறையிடம் மிரட்டல் நபர் குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மிரட்டல் நபர் குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், டேட்டிங் இணையதளங்களில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!

Website – www.colombotamil.lk 
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil

#TamilNews, #SriLanka, #Colombo, #lka  #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்