‘ஆடை’யை அவிழ்த்த அமலாபால்

0

சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் ஒரு சிலர் தான். ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரையிலும் எந்த ஒரு நடிகையும் ஆடை இல்லாமல் நடித்ததில்லை என்ற வரலாறு இல்லை. அந்த வரலாற்றை 2019ம் ஆண்டில் மாற்றி எழுதியவர் அமலா பால்.

அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ‘ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே அதுவே படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது.

படம் வெளிவந்த பின், அந்த நிர்வாணக் காட்சி பரபரப்பு படத்தின் வரவேற்புக்கு எந்த விதத்திலும் உதவி புரியவில்லை என்பது வேறு கதை. இருந்தாலும் அமலா பால் கதாபாத்திரத்திற்குத் தேவையான விதத்தில் அந்த துணிச்சலான காட்சியில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் அதை ஏற்கவில்லை என்பது உண்மை.

இந்த ஆண்டில் அமலாபால் நடித்துள்ள அடுத்த படமான ‘அதோ அந்த பறவை போல’ படம் இந்த மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

x