காணாமல் போன கான்ஸ்டபிள்

ஆடைகள் இன்றி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

நாமக்கல் அருகே சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் ஆடைகள் இன்றி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி ஜேடர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு பகுதியில், பெண் ஒருவர், உடம்பில் துளிகூட ஆடைகள் இன்றி, நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, பொது மக்கள் சிலர், அங்குள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறி உள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த பொலிஸார் அந்த பெண்ணின் சடலத்தைப் பார்த்துள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது. உடம்பின் பல பகுதிகளிலும் காயங்கள் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் உடலை மீட்ட பொலிஸார், பிரேதப் பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உயிரிழந்த பெண் அங்குள்ள பெரிய மணலியை அடுத்துள்ள குமரவேலி பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் மனைவி 35 வயதான நாகலட்சுமி என்பது தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அங்குக் கிடந்த சில பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, நாகலட்சுமி உடல் மீட்கப்பட்ட இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து நாகலட்சுமி உடலை இழுத்து வந்து, இந்த சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. அது தொடர்பான தடங்களும் அங்குக் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண் பாலியல் பலாத்கார சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்கள் குறித்து பொலிஸார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி!

Next Article
தமன்னா

“எனக்கு விருதுகள் தராதது அநியாயம்”

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
3
Share