ஆஜித் காலிக்கிற்கு உண்மையிலேயே என்ன வயசு? அவரை பற்றிய முழு விவரம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக நுழைந்திருப்பவர் ஆஜித் காலிக். 2012இல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீஸன் டைட்டில் வென்றவர் அவர்.

அவர் பாடகராக பிரபலமான ஒருவராக இருக்கும் நிலையில், தற்போது பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கம்பேக் கொடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் 4 துவங்கி இரண்டு நாட்கள் ஆகும் நிலையில் ஆஜித் காலிக் பற்றி பல்வேறு சந்தேகங்கள் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

அவரின் உண்மையான வயது என்னவென்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள். அவருக்கு வயது அதிகமாக இருந்தாலும் குழந்தைத்தனமாக இருக்கிறார் என அவரை பற்றிய விமர்சனமும் பிக் பாஸ் ரசிகர்களால் வைக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது வயது பற்றி குடும்பத்தினர் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு மிக பாப்புலரான ஆஜித் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

பூவரசம் பீப்பீ படத்தில் மூன்று பாடல்களை அவர் பாடி இருந்தார். அதற்கு பிறகு சில படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமா துறையில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு இருந்தார். இதன் பிறகு தான் தற்போது பிக் பாஸ் நான்கு மூலமாக சின்னத்திரைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.

உண்மையிலேயே ஆஜித் காலீக்கிற்கு என்ன தான் வயது என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்த நிலையில் தற்போது அதைப் பற்றி அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஆஜித்திற்கு 18 வயது தான் ஆகிறது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

“ஆஜித்திற்கு என்ன வயது? பிக்பாஸ் ஷோவில் பங்கேற்க அவர் மிகவும் வயது குறைந்தவராக இல்லையா?” என ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்திருக்கும் ஆஜித் காலிக்கின் குடும்பத்தினர். “வெற்றி பெறுவதற்கு வயது முக்கியம் இல்லை.

பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆஜித் 18 வயதிலேயே உள்ளே போட்டியாளராக நுழைந்திருக்கிறார். அது ஒரு சிறந்த விஷயம் இல்லையா. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்” என கூறியிருக்கின்றனர்.

இதனால் ஆஜித் காலிக் வயது பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

பிக் பாஸ் வீட்டில் ஜாதி பெயரை கேட்டாரா சுரேஷ் சக்ரவர்த்தி? புதிய சர்ச்சை

Next Article

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

Related Posts
அனுஷ்கா
Read More

அனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்

அனுஷ்கா தற்போது பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அனுஷ்கா நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான சைலன்ஸ்…
Read More

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தினை வெறும் 30 நாட்களில் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ்…
Read More

மாநாடு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கினாலும்…
Total
3
Share