அ.தி.மு.க பயப்படுகிறது: உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பரப்புரையை நாகை மாவட்டம் திருக்குவளை கருணாநிதி பிறந்த வீட்டில் இருந்து நேற்று தொடங்கினார்.

இந்த நிலையில், கொரோனா காலத்தில் காவல்துறையின் அனுமதியை மீறி பிரசாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்.

இன்று இரண்டாவது நாகை அக்கரை பேட்டை மீன் பிடி துறைமுகத்தில் காவல்துறை தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் மீனவர்கள் இடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து மீனவர்களோடு படகில் பயணம் செய்த உதயநிதி, மீனவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்த உதயநிதியை தடுத்து நிறுத்திய பொலிசார் கைது செய்தனர்.

உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்களையும் வலுக்கட்டாயமாக பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், என்னுடைய பிரச்சாரத்தை கண்டு அதிமுக அரசு பயப்படுகிறது.

ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி, என்னுடைய பிரசாரத்தை தடுக்கும் வகையில் கைது செய்கிறார்கள். குறைவான நபர்களே பிரச்சாரத்தில் பங்கேற்ற போதும் எங்களை கைது செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு!

Next Article
அனுஷ்கா

அனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்

Related Posts
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
நிவர் புயல்
Read More

“நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடக்கும்”

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே அடுத்த 1 மணி நேரத்தில் கரையை கடக்கலாம் என்று கணித்துள்ளதாக இந்திய…
Read More

மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து…
Total
1
Share