அறந்தாங்கி நிஷாவின் கண்ணீர் கதை கேட்டு சோகமான போட்டியாளர்கள்

இத்தனை வருடங்கள் இருந்தது போல இல்லாமல் பிக் பாஸ் 4வது சீசன் முதல் நாளிலிருந்தே மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது.

போட்டியாளர்கள் நடுவில் இப்போதே மனஸ்தாபம், கோபம், சண்டை என அனைத்தும் துவங்கியிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் 16 போட்டியாளர்களும் தங்கள் சொந்த கதைகள் பற்றி அதிகம் பேசி வருகிறார்கள்.

இன்று காலை வெளியிடப்பட்டிருந்த பிக் பாஸ் ப்ரொமோவில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தன்னுடைய அம்மா மிகவும் கருப்பாக இருக்கிறார் என்பதற்காக தாழ்வு மனப்பான்மையுடன் அதிகம் இருப்பது பற்றி உருக்கமாக பேசியிருந்தார்.

நகை அணிந்தால் தன்னுடைய கலர் இன்னும் மோசமாக தெரியும் என்பதால் நகை கூட அணிய மாட்டார், எனவும் அறந்தாங்கி நிஷா போல அதை பாசிட்டிவாக மாற்றி கொள்ள தன் அம்மாவும் கற்றுக் கொள்ள வேண்டும் என அனிதா சம்பத் உருக்கமாக கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் நான்காவது ப்ரொமோ வீடியோவில் அறந்தாங்கி நிஷா தன்னுடைய சொந்த கதையை கண்ணீருடன் அனைவர் முன்பும் பேசுவது போல காட்டப்பட்டிருக்கிறது.

அனைவரும் அவரவர் கதைகளை சொல்ல வேண்டுமென்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார், மேடை மீது ஏறி நின்று அறந்தாங்கி நிஷா பேசுகிறார்.

”நான் எந்த இடத்திலும் யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என ஓடிக் கொண்டே இருப்பேன். ஆனால் நான் ஒரு பச்சை குழந்தையுடன் விளையாடி விட்டேன்.

60 ஆவது நாள் குழந்தைக்கு செங்கல்பட்டு அருகில் விபத்து நடந்து விட்டது. என்னுடைய வேலையை நான் அவ்வளவு லவ் பண்ணேன். அதனால் பாப்பாவுக்கு அடிபட்டுவிட்டது. இப்போது அம்மா நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த உலகத்தில் அழகாக இருப்பவன் சாதித்ததை விட, அவமானப்பட்டவன் தான் அதிகம் சாதித்து இருக்கிறான்” என்று அறந்தாங்கி நிஷா கூறியிருக்கிறார்.

மற்ற போட்டியாளர்களும் அவரது கதையை கேட்டு கலக்கம் அடைந்துவிட்டனர்.

இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றவர்களை காமெடியால் சிரிக்க வைக்கும் அறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் இவ்வளவு சோகமா என தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
Tamil Panchangam, இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 அக்டோபர் 07

Next Article

போன வருஷமே பிக் பாஸ் அழைப்பு வந்தது.. வீட்ல அனுப்பல: ஷிவானி

Related Posts
ரேணு தேசாய்
Read More

காதலில் ஏமாற்றப்பட்டேன்.. பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி திடுக்!

காதலில் இருக்கும்போது தான் ஏமாற்றப்பட்டதாக பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார். தமிழில், செல்வா இயக்கத்தில், பிரபுதேவா, பார்த்திபன், கவுசல்யா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில்…
Read More

இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா தந்தை உடல் நலக்குறைவால் மரணம்

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனர் ஆனவர் சிவா.…
Read More

கையில் சரக்குடன் பிக்பாஸ் சம்யுக்தா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சம்யுக்தா கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிரபலங்களில் ஒருவரான சம்யுக்தா…
வாணி போஜன்
Read More

வாணி போஜனின் அதிரடி அறிவிப்பு!

நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து…
Total
3
Share