Sun, Jan17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

அரசியல் களம் காணும் ரஜினிகாந்த்? – இறுதி முடிவெடுக்க நாளை ஆலோசனை!!

நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை (நவம்பர் 30) ஆம் திகதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“நான் அரசியலுக்கு வருவது உறுதி” என நடிகர் ரஜினி உறுதிபட தெரிவித்த நாள் 4 ஆம் ஆண்டை நெருங்கியிருக்கிறது.

தான் கட்சி ஆரம்பித்தால் முதல்வர் வேட்பாளர் நான் இல்லை என தெரிவித்து விட்ட ரஜினிகாந்த், நேர்மையானவர்கள் கட்சியில் இணையலாம் என அழைப்பும் விடுத்திருந்தார்.

அரசியலுக்கு ஆயத்தமா? – நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

இதற்கிடையில் சமீபத்தில் ரஜினிகாந்த் பெயரில் கடிதம் ஒன்று வெளியானது. அதில் கொரோனா காலநிலை மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலில் களமிறங்க தயங்குவதாக சொல்லப்பட்டிருந்தது.

அதற்கு விளக்கமளித்த ரஜினி, தனது உடல்நிலை குறித்த செய்தி உண்மை என்றும், அரசியல் களம் குறித்து நிர்வாகிகளுடன் கலந்துபேசி தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறினார்.

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை(நவம்பர் 30) அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அரசியல் பிரவேசம் குறித்த இறுதி முடிவெடுக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest news

Related news