அம்பாறை மாணவனின் பிரேத பரிசோதனை இன்று

வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மற்றுமொரு மாணவனுடன் ஏற்பட்ட மோதலில், குறித்த மாணவன் எதிர்பாராத விதமாக கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாணவனின் பிரேத பரிசோதனை இன்று

அம்பாறை – திருக்கோவில் – தம்பிலுவில் பகுதியில் உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது.

வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மற்றுமொரு மாணவனுடன் ஏற்பட்ட மோதலில், குறித்த மாணவன் எதிர்பாராத விதமாக கீழே வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார். தரம் 8 இல் கல்வி பயின்ற 13 வயதான தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோதலுடன் தொடர்புடைய மற்றுமொரு மாணவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் திருக்கோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.