Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

அமெரிக்க – சீன உறவின் முக்கியத்துவம் பற்றிப் பிரதமர் லீ வலியுறுத்துவார்?

சீன பிரதமர் லீ சியென் லூங், அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையில் நிலையான, ஆக்ககரமான உறவுகள் இருப்பதன் முக்கியத்துவத்தை Shangri-La கலந்துரையாடலின்போது வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை Shangri-La கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளதுடன், பிரதமர் லீ, பாதுகாப்பு தொடர்பான அந்த உயர்நிலை வருடாந்த கருத்தரங்கைத் தொடங்கிவைத்து உரையாற்றுவார்.

அதில் வட்டாரப் பாதுகாப்புக்கு அமெரிக்க-சீன நல்லுறவு முக்கியம் என்பதை அவர் எடுத்துக்கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் தற்போதைய மாற்றங்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும், சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு அனுசரிப்பு குறித்தும் லீ பேசுவார் என்று அனைத்துலக உத்திபூர்வக் கல்விக் கழகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த அந்த ஆய்வுக் கழகம், உலகப் பாதுகாப்பு, அரசியல், இராணுவச் சிக்கல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் Shangril La கலந்துரையாடலின் ஏற்பாட்டுப் பொறுப்பை  குறித்த அமைப்பு ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news