Cincinnati Shooting

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம் !

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகி இருக்கின்றனர்.

இந்த் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சின்சினாட்டி நகரில் இரவு 13.30 மணிக்கும், 2.15 மணிக்கும் அடுத்தடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இது மட்டுமல்லாமல் நகரின் வேறு சில இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதில் மொத்தம் 18 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியாகி இருப்பதாக சின்சினாட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் இடையே 60 முதல் 90 நிமிடம் இடைவெளி இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து சின்சினாட்டி நகர் பொலிஸ் உதவி தலைமை அதிகாரி பவுல் நெடிகாட் கூறுகையில் “வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு மிகவும் கொடூரமானது. இதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரம் இப்போது வரை தெரியவில்லை” என்றார்.

மேலும் “17 பேர் வைத்தியசாலையில் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலி எண்ணிக்கையும் உயர வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள்” என்றார் பவுல் நெடிகாட்

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
3
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

'எஸ்.பி.பி உடல்நலம் தேறி வருகிறார்’ - சரண்

Next Article

கோயில் நிர்வாகி வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

Related Posts
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
Total
3
Share