அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்

அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையைக் கண்டித்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்தியத் துாதரகம் அருகே காணப்படும், மஹாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் வகையில், அதன் மீது பெயின்ட் வீசப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, மஹாத்மா காந்தியின் வெண்கல சிலையின் மீது, சிலர் பெயின்டை தெளித்து அசிங்கப்படுத்தியுள்ளமை தொடர்பில் இந்தியத் துாதரகம், அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் புகார் தெரிவித்துள்ளது.

மேலும், பொலிஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த, 2000ம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி பில் கிளின்டன் முன்னிலையில், அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயி இந்த சிலையை திறந்து வைத்தார்.

அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள ஒரு சில வெளிநாட்டுத் தலைவர்கள் சிலைகளில், மஹாத்மா காந்தியின் சிலையும் ஒன்றாகும்.

சிலையை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அஹிம்சையை போதித்த காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
இந்துஜா

'கவர்ச்சி' எங்கே உள்ளது தெரியுமா? நடிகையே சொல்கிறார்

Next Article
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம் தொடர்பில் இன்று அறிவிப்பு

Related Posts
Read More

டீக்ரே பிராந்தியத் தலைநகரை ராணுவம் பிடித்துவிட்டது; எத்தியோப்பியப் பிரதமர் அபிய் அகமது அறிவிப்பு

எத்தியோப்பியாவில் வட டீக்ரே பிராந்தியத்தின் மீது அந்நாட்டின் மத்திய அரசு நடத்திவரும் போரில் டீக்ரே பிராந்தியத் தலைநகரம் மிகாய்லி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக…
தைவான், தாய்வான், நாடாளுமன்றம், பன்றி குடல்
Read More

தாய்வான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்

அமெரிக்காவுடன் தாய்வான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தாய்வான் ஜனாதிபதி…
தூக்கு தண்டனை
Read More

கொரோனாவால் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்த கிம் ஜாங் அன்

வடகொரியா நாட்டின் ஜனாதிபதி கிம் ஜங் அன் அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வந்தாலும், வடகொரியா…
டிரம்ப்
Read More

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா டொனால்ட் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருந்தாலும், அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்…
Total
0
Share