Mon, Jan25, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

அமெரிக்காவில், இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில், தமது ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டம் நடத்தும்படித் தூண்டியதாக, ஜனாதிபதி டிரம்ப் மீது அரசியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படுவதை ஆதரித்து, மக்களவை வாக்களித்துள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றிக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 10 பேரும், அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக அரசியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் ஜனாதிபதியாக டிரம்ப் ஆனார்.

அவரது பதவிக்காலம், இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவிருக்கும் வேளையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அவர் மீதான அரசியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு, செனட் சபையில் நடைபெறும்.

அங்கு அவர் மீதான குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால், டிரம்ப் அரசியலில் ஈடுபடுவதில் இருந்து தடை செய்யப்படக்கூடும்.

இருப்பினும், பதவிக்காலம் முடியும்முன் அவர் வெள்ளை மாளிகையிலிருந்து விலகமாட்டார்.

ஒருவாரத்துக்குள் செனட் கூடாது என்பது, அதற்குக் காரணம்.

புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), தேர்தலை முறையற்ற முறையில் வென்றதாகத் டிரம்ப் ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்டி வருகிறார்.

கடந்த வாரம் அவர், நாடாளுமன்றத்தை நோக்கிப் படையெடுக்குமாறு தமது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அது, தமது வலிமையைக் காண்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாடாளுமன்றத்துக்குச் சென்ற அவரது ஆதரவாளர்கள் அங்கே கலவரத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப்பே அந்தக் கலவரத்துக்குப் பொறுப்பு என்று மக்களவை நாயகர் திருவாட்டி நான்சி பெலோசி (Nancy Pelosi) கூறிவருகிறார்.

டிரம்ப் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென அவர் வற்புறுத்திவருகிறார்.

“அவர் அமெரிக்காவுக்கு உடனடி ஆபத்து விளைவிக்கக்கூடியவர் என்பது தெளிவாய்த் தெரிகிறது” எனத் திருமதி பெலோசி வருணித்தார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்