Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

அதிவேகத்தில் கார் மோதியதில் தந்தை பலி; மகள் படுகாயம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த உத்தரவு ஆகஸ்ட் மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கோவையில் திருச்சி சாலையில் ஊரடங்கு விதி மீறி அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 55. இவரது மகள் தீபிகா, 22. உறவினர் ஒருவரின் திதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

வாகனத்தை தீபிகா ஓட்டி வந்தார். இந்நிலையில், தனியார் பள்ளி சிக்னலில் இருந்து வலது புறத்தில் வாகனத்தை திருப்பும் பொழுது, ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்களின் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தீபிகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சிங்காநல்லூரை சேர்ந்த நிரஞ்சன் எனத் தெரிந்தது. நிரஞ்சன் முன்னாள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x