ரஜினி,கமல்

அதிமுக – திமுகவுடன் கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்

வருகிற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணி வைக்காது என்ற தகவல் உண்மைதான் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தபோது, ஊடகங்களுக்கு இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மக்களுக்கு நல்லதை பறிமாற முற்பட்டு இருக்கும்போது, கையை சுத்தமாக வைத்திருக்கிறோம். அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட்டு கை அழுக்காகி விட வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.

அ.தி.மு.க.வை தனியாக சொல்லவில்லை என எண்ண வேண்டாம். ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சியை எதிர்த்து வருகிறேன். எனவே அ.தி.மு.க.வுடனும் கூட்டணி கிடையாது.
நடிகர் ரஜினிகாந்த் தனது இல்ல திருமணத்துக்காக அரசியல் கட்சியினரை அழைக்க போயிருக்கிறார். இந்து திருமண முறை பற்றி தி.மு.க.வினர் பேசுவது புதிது அல்ல.

அது எனக்கு பேரதிர்ச்சியையும் தரவில்லை. அது அவர்கள் கருத்து. இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமண முறை குறித்து ஸ்டாலின் பேசியிருக்க தேவையில்லை என்பது என் கருத்து.

எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும்போது யாருடன் கைகோர்க்கிறோம் என்பதை வெகு ஜாக்கிரதையாக ஆராய வேண்டியுள்ளது. எங்கள் கை கறை படுத்தாத வகையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.

‘ஏற்பாடுகள் அதை நோக்கித் தான் இருக்கிறது. அது மக்கள் கையில் தான் உள்ளது. எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் எண்ணம்’ என்றார்.

விஜய் பெயரை சொல்லி அதிர்ச்சியளித்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Total
3
Shares
Previous Article
The Colombo struggle has been weakened

“கால அவகாசத்துக்கே யோசனை ஒத்திவைப்பு”

Next Article
பாதாள உலக குழு

போதைபொருளுடன் இந்தியர் கைது

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
3
Share