இந்தியா

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்களின் விவரம்

* உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்க தீர்மானம்.

* மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.

* நாட்டின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம்.

* நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக்கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக நல்லாதரவு வழங்கியவர்களுக்கு இந்த கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close