Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

அதிகரிக்கும் கொரோனா… ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடக்குமா?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி மும்பையில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் 9ஆம் திகதி தொடங்க உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா ஆகிய 6 ஊர்களில் இப்போட்டிகள் நடக்கின்றன.

கொரோனா நாடெங்கும் அதிகரித்துள்ள இச்சூழலில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டிகளை காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தொடரில் பங்குபெறும் வீரர்கள், பயிற்சியாளர்கள், அம்பயர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்படாத வண்ணம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றையும் மீறி ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்பட்டுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தேவ்தத் படிக்கல்லுக்கு தொற்று உறுதியானதால் மற்ற வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்ஸர் பட்டேலுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் மும்பை மைதானப் பணியாளர்கள் 10 பேருக்கும் போட்டி மேலாளர்கள் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியிருந்தது. இது தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இவர்கள் அனைவருமே மும்பையில் தங்கியிருப்பவர்கள் ஆவர். இதனால் மும்பையில் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாகும் போதும் ஐதராபாத் அல்லது இந்தூருக்கு போட்டிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அங்கு கடுமையான பொது முடக்கம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x