இலங்கை

அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தைக் கைவிட ரஷ்யா தயார்

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வாஷிங்டனுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் அதனைக் கைவிட மாஸ்கோவும் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் (Saint Petersburg) நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, உத்திபூர்வ ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் குறித்து அவர் பேசினார்.

2010 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளதுடன், அதனைப் புதுப்பிப்பது தொடர்பில் அமெரிக்கா ரஷ்யாவுடன் எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்பதை ஜனாதிபதி புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அணுவாயுதங்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்க உதவும் அந்த ஒப்பந்தம் முடிவடைந்தால் அணுவாயுதப் போட்டாபோட்டிக்கு அது வித்திடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சில், அணுச்சக்தித் திறன் கொண்ட நாடுகள் அனைத்தும் ஈடுபடவேண்டும் என்றும் புட்டின் வலியுறுத்தினார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close