Sat, May8, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

அடைக்கலம் நாடி மியான்மர் பொலிஸார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் திகதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 பொலிஸாரை அந்த மாநில பொலிஸார் நேற்று பிடித்தனர்.

இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் சிக்கினர்.

அவர்களிடம் விசாரித்தபோது, மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு பயந்து மியான்மர் பொலிஸார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x