Sat, Apr17, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

அடுத்த முதலமைச்சர் கனவை எடப்பாடி பழனிச்சாமி காணமுடியாது’: ஸ்டாலின் விமர்சனம்

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சர் என்ற கனவை காணமுடியாது என திமுக தலைவரும் வேட்பாளருமாகிய முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் அங்கு உரையாற்றுகையில், எனது கனவு பலிக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறி வருகிறார்.
நானாவது கனவு காண்கிறேன், அவருக்கோ அடுத்த முதலமைச்சர் பதவி என்பதைக்கூட கனவில் காண முடியாது என விமர்சித்துள்ளார்.

மேலும், ஆளும் கட்சியினர் கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை, கொரோனா காலத்தில் கழகத் தோழர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி உதவி செய்தது திமுகவின் மிகப்பெரிய வரலாறு என்பதை நான் சொல்ல விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ‘தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவில் அல்ல, உலகத்தில் எந்த கட்சியும் செய்யாத ஒரு சாதனையைத் திமுக செய்தது.

அரசாங்க பணத்தைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிற ஒரு ஆட்சி தான் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது’ எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்னை முதலமைச்சராக்க வேண்டும் என்பதில் மக்கள் இன்றைக்குத் தெளிவாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிமுக ஆட்சியை மட்டுமல்ல, பாஜகவையும் உள்ளே விடக்கூடாது எனவும் திராவிட மண், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். மோடி மஸ்தான் வேலைகள் இங்குப் பலிக்காது எனவும் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x