அமெரிக்க வீரர்கள்

அடுத்த மாதம் விண்வெளியில் நடக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்

அடுத்த மாதம் 28ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது.

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்படுகிறபோது அல்லது அதன் தளவாடங்களை மாற்றி அமைக்க வேண்டியபோது அல்லது பிற பணிகளின் போது, அதனுள் தங்கி இருக்கிற விண்வெளி வீரர்கள் வெளியே வருவார்கள்.

அப்போது அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு, மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றுவிடுவார்கள். இது வழக்கமான நடைமுறை.

இந்த நிலையில், அடுத்த மாதம் 28ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடக்கப்போகிறார்கள் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிச்செல்கிற விண்கலங்கள் இறங்குவதற்கான இரண்டாவது தளத்தை அமைக்கிற பணியில் இந்த வீரர்கள் ஈடுபடுவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Total
1
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
டிரம்ப்

மீண்டும் இந்தியா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

Next Article
நியூசிலாந்து

இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி நாளை தொடரும் என அறிவிப்பு

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
1
Share